ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ம் தேதி முதல் தொடங்கும் என்றும், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8ம் தேதியும், வேட்புமனு திரும்ப பெறும் நாள் பிப்ரவரி 10 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுன் அரசியல் கட்சிகள் அதிர்ச்சியில் உள்ளன. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை அணிகள் பிளவு பட்டுக் கிடந்தாலும், கொங்கு மண்டலத்தில் ஓ.பி.எஸ்.ஸால் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. அதே சமயம், கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

தி.மு.க.வைப் பொறுத்தளவில், குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பது போன்ற தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்றாமல் இருப்பது மைனஸாக இருந்தாலும், அ.தி.மு.க. பிளவு பட்டுக் கிடப்பது அக்கட்சிக்கு பிளஸ்ஸாக இருக்கிறது.

அதே போல் பா.ஜ.க., பா.ம.க. போன்ற கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்கிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இன்னும் சில நாட்களில் கூட்டணி குறித்த முழு விபரங்கள் தெரியவரும். இடைத்தேர்தல் கூட்டணிதான் பாராளுமன்றத் தேர்தலிலும் நீடிக்க வாய்ப்பிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal