திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் (80) தான் திமுக அமைச்சரவையிலேயே மூத்தவர். எந்த பிரச்சினைக்கும் நகைச்சுவை கலந்த பேச்சால் எதிர்க்கட்சியினர் கூட துரைமுருகன் பேச்சை ரசிப்பார்கள். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துரைமுருகனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படும் துரைமுருகன் மருத்துவமனைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் துரைமுருகனுக்கு இன்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal