இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை தெருக்களுக்கு வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆணையர் விளக்கம் அளித்திருக்கிறார்!

கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 63 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. இதில் தி.மு.க. 36-வது வார்டு மாநகராட்சி உறுப்பினர் வசுமதி கொண்டுவந்த தீர்மானத்தில் 36-வது வார்டில் மணக்களம் தெரு என மாநகராட்சி பதிவேட்டில் உள்ள பெயரை நீக்கிவிட்டு, அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் முதல் தெரு, 2-வது தெரு, 3-வது தெரு என்று பெயர் மாற்றம் செய்து மாநகராட்சி பதிவேட்டில் ஏற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு கவுன்சிலர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதநிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கருதப்பட்டது. இந்த நிலையில் நேற்று கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாநகராட்சி கூட்டத்தில் வசுமதி கொண்டுவந்த எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை எனவும், ஏற்கனவே உள்ள மணக்களம் தெருவின் பெயரில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal