தமிழ்நாடு அரசு புத்தாக்கம் நிறுவனம் சுய தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் தமிழ்நாடு சுய தொழில் தொடங்கும் மற்றும் புத்தாக்கம் திட்டம் குறு மற்றும் சிறு தொழில் துறையில் கீழ் செயல்படுகிறது.

இந்த துறை நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் சம்பளம் பணியிடம்
திட்ட இணையாளர் ரூ.25,000-50,000/- 13

அந்தந்த துறை சார்ந்த பதவிக்கான பிரிவுகள்:
பதவியிடம் எண்ணிக்கை
Project Associate – Fablabs – Tech Assistant 3
Project Associate – Investment Initiatives 2
Project Associate – Incubation & Acceleration 1
Project Associate – Regional Startup Hub 3
Project Associate – Community Initiatives 1
Project Associate – Project Management Unit 3

பணிக்கான பொறுப்புகள்:

இந்த பணிக்குக் கண்டிப்பாகத் தொழில் தொடங்குதல் (Start up) பற்றிய தெளிவு தேவை.

குழுவை வழிநடத்தும் திறன் தேவை. தொழிற்சாலைகள், நவீனத் தொழில்நுட்ப துறைபற்றி அறிவு மற்றும் அதனின் கருவிகள் பயன்பாடு குறித்த தெளிவு தேவை.

தொழில் தொடங்குதல் பற்றிய திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தத் திறன் வேண்டும்.

கல்வித்தகுதி:

ஏதாவது பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களின் சுய விவரப்பட்டியல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்குத் தொழில்நுட்ப சுற்று மற்றும் HR நேர்காணல் நடத்தப்படும்.

இந்த மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய TNPSC பணிகள் : முழு விவரங்கள் இதோ..!

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கான விண்ணப்பங்களை ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வத்தளத்தில் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பத்திற்கு எந்தவித கட்டண கிடையாது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://forms.zohopublic.in/startuptn

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal