உலக நாயகனின் மகள் என்னும் மிகப்பெரும் அடையாளத்தோடு திரையுலகிற்கு வந்த ஸ்ருதிஹாசன் ஆரம்ப காலத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது தமிழ், தெலுங்கு என்று ஒரு ரவுண்டு வந்த இவர் சமீப காலங்களாகவே தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த லாபம் திரைப்படமும் தோல்வியை தழுவியது. அதைத் தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவர் தற்போது அங்கு மூன்று திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஆங்கிலத் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்காக அவர் அவ்வப்போது வெளிநாட்டுக்கு சென்று வருகிறார்.
படப்பிடிப்புக்காக அவர் சென்றாலும் நாட்கணக்கில் வெளிநாட்டில் தங்குவதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. அதாவது ஸ்ருதிஹாசன் ஏற்கனவே உடல் நிலையில் சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூட வெளிப்படையாக தெரிவித்திருந்தார். சாதாரணமாக பெண்களுக்கு வரும் பிரச்சனை தான் என்றும் பெரிய அளவில் எனக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் உண்மையில் அவருக்கு நடிகை சமந்தா போல் வித்தியாசமான ஒரு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதாம். அதை தெரிந்து தான் அவருடைய காதலர் அவரை விட்டு பிரிந்து சென்றார். அதை தொடர்ந்து இரண்டாவதாக ஒருவரை காதலித்து லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஸ்ருதிக்கு அந்த காதலும் ஏமாற்றத்தை தான் கொடுத்தது.
இரண்டாவது காதலும் பிரேக் அப் ஆன நிலையில் அவர் தற்போது வெளியிடங்களுக்கு வருவதைக் கூட குறைத்துக் கொண்டார். அது மட்டுமல்லாமல் அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் அதில் அவர் முற்றிலும் அடையாளம் மாறி போய் சேர்ந்த முகத்துடன் இருந்தார்.
அதைப் பார்த்து பதறி போன ரசிகர்கள் அவருக்கு என்னதான் ஆச்சு என்று வெளிப்படையாகவே கேள்வி எழுப்பினர். ஆனாலும் அது குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில் தான் இப்படி ஒரு விவகாரம் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது சுருதி தன்னுடைய உடல்நல பிரச்சனையை சரி செய்வதற்காகத்தான் வெளிநாட்டிலேயே டெண்ட் போட்டுள்ளார். அங்கு அவருக்கு சத்தம் இல்லாமல் சீக்ரெட்டாக சிகிச்சை நடைபெற்று வருகிறது. விரைவில் அதிலிருந்து அவர் மீண்டு மீண்டும் உற்சாகத்தோடு திரைப்படங்களில் கவனம் செலுத்த இருக்கிறாராம்.