குஜராத் சட்டசபை தேர்தல் 2022 -ன் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்று மாலை முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தல் 2022 இன் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. குஜராத் சட்டசபையில் உள்ள 182 இடங்களுக்கான இரண்டு கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1 முதல் டிசம்பர் 5 வரை நடைபெற்றது. டிசம்பர் 8 ஆம் தேதி, 2022 குஜராத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

குஜராத்தில் 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு 14,975 வாக்குச்சாவடிகளில் தொடங்கியது. 833 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டனர். பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியது. குஜராத்தில் 2 ஆவது சுற்று வாக்குப்பதிவில் படுத்த படுக்கையாக இருந்த வாக்காளர்கள், ஆக்சிஜன் உதவி பெறும் வாக்காளர்கள், நூறு வயது முதிர்ந்தவர்கள் உட்பட முதியவர்கள், திருநங்கைகள் ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

இதன் மூலம் அவர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு முன்மாதிரியை மற்றவர்களுக்கு வழங்கினர். 2017 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக 182 இடங்களில் 99 இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் 77 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் கட்சி விஜய் ரூபானியை முதலமைச்சராக நியமித்தது. அவருக்குப் பின் 2021ல் பூபேந்திர படேல் பதவியேற்றார்.

இந்த நிலையில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்ததை அடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு:

182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பெரும்பான்மை பலம் பெற 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில்,

நியூஸ் எக்ஸ்:

பாஜக: 117 – 140

காங்கிரஸ்: 34 – 51

ஆம் ஆத்மி: 6 – 13

மற்றவை: 1 – 2

டைம்ஸ் நவ்:

பாஜக: 131

காங்கிரஸ்: 41

ஆம் ஆத்மி: 6

மற்றவை: 4

ரிபப்ளிக் டிவி:

பாஜக: 128 – 148

காங்கிரஸ்: 30 – 42

ஆம் ஆத்மி: 2 – 10

மற்றவை: 0 – 3

இந்தியா நியூஸ்:

பாஜக: 117 – 140

காங்கிரஸ்: 51 – 34

ஆம் ஆத்மி: 6 – 13

மற்றவை: 1 – 2

இந்தியா டுடே:

பாஜக: 131 – 151

காங்கிரஸ்: 16 – 30

ஆம் ஆத்மி: 9 – 21

மற்றவை: 2 – 6

டிவி 9 பாரத் வர்ஷ்:

பாஜக: 125 – 130

காங்கிரஸ்: 40 – 50

ஆம் ஆத்மி: 3 – 5

மற்றவை: 3 – 7

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal