கள்ளக்காதலை கைவிட சொன்னதால் ஆத்திரத்தில் கள்ளக்காதலி மற்றும் அவரது மகளை சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வீரானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பரிமளா (38). இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து பரிமளா 2 மகள்கள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். கூலி வேலைக்கு சென்று அவரது வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார். அடிவாரம் கிராமத்திற்கு வேலைக்கு சென்று வந்த போது காமராஜ்(48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ள.
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், மகள்கள் பெரிதாக வளர்த்துவிட்டதால் நம் கள்ளக்காதலை கைவிட்டுவிடலாம் என கூறியுள்ளனர். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், பரிமளாவும், அவரது 2வது மகளும் அடிவாரம் பகுதியில் உள்ள காட்டிற்கு விறகு வெட்ட சென்றனர்.
அப்போது, கள்ளக்காதலன் காமராஜ் வழிமறித்து மீண்டும் பரிமளாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காமராஜ் கத்தியால் பரிமளாவின் கழுத்து, மார்பு, தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தடுக்க முயன்ற மகள் ராஜேஷ்வரியையும் சரமாரி வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிய ராஜேஸ்வரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கள்ளக்காதலன் காமராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.