சென்னையில் போதை தலைக்கேறிய நிலையில், போலீஸ் ஏட்டுவை இளம்பெண் ஒருவர் போட்டுத் தாக்கிய சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

தேனாம்பேட்டை போக்குவரத்து பிரிவு போலீஸ் ஏட்டு ராமமூர்த்தி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். நேற்று அதிகாலையில் அவர் சோதனையில் ஈடுபட்டபோது பெண் ஒருவர் மோட்டார்சைக்கிள் ஓட்டி வந்தார். அவருக்கு பின்னால் வாலிபர் ஒருவரும் இருந்தார். மோட்டார் சைக்கிளை நிறுத்திய ஏட்டு அந்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்ததால் வாயை ஊதச் சொன்னார். அவர் மது குடித்து இருந்ததால் ஊத மறுத்தார்.

இதனால் போலீசுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பெண் ஏட்டுவை தாக்கினார். இதையடுத்து இருவரிடமும் போலீசார் குடிபோதையில் இருந்ததற்கான பரிசோதனை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் ஷெரின் பானு (48). தனியார் நிறுவனத்தில் நிதி ஆலோசகராக பணியாற்றி வருவது தெரிய வந்தது. நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் அவர் மும்பையைச் சேர்ந்த ஆண் நண்பர் விக்‌னேஷ் (30) என்பவருடன் ஓட்டலுக்கு சென்று விட்டு மது போதையில் வாகனத்தில் வரும்போது போலீசாரிடம் சிக்கி கொண்டது தெரிய வந்தது.

போக்குவரத்து போலீசை தாக்கிய பெண் ஷெரின் பானு மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் தேனாம்பேட்டை போக்குவரத்து போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal