பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழியின் பிறந்த நாளை உடன் பிறப்புக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்ட போது, உட்கட்சியிலேயே விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அந்த விமர்சனங்களை எல்லாம் உடைத்தெறிந்து, ‘அரசு பள்ளியில் படிப்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம்’ என சட்டமன்றத்தில் சொன்னதை நிறைவேற்றி வருகிறார்.

‘இல்லம் தேடி கல்வி…’ முதற்கொண்டு எண்ணற்ற புதிய திட்டங்களை புகுத்தி அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தில் வெளிச்சத்தைப் புகுத்தியிருக்கிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் பிறந்த நாளான இன்று (டிசம்பர் &2) திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. திருச்சி அம்பிகாபுரம் எஸ்.எஸ்.எஸ். கான்வெண்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

மலைக்கோட்டை மாவட்டமான திருச்சியில் பிரம்மாண்ட போஸ்டர்கள் வியக்க வைக்கின்றன! மேலும் நலத்திட்ட உதவிகள்… முதியவர்களுக்கு சேவைகள்.. என மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal