தாயின் கள்ளக்காதலை அறியாத பெண், தன்னுடைய மகளை அவரது வீட்டிற்கு அனுப்ப, தாயின் கள்ளக் காதலன் சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரையை சேர்ந்தவர் வசந்த் (வயது 27). இவர் யாகப்பா நகர் பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அந்த கறிக்கடையில் சில மாதங்களுக்கு முன்பு 48 வயதுடைய பெண் ஒருவர் வேலைக்கு சேர்ந்தார். அப்போது வசந்திற்கும், அந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது.

அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அதே பகுதியில் தனி வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணுக்கு கணவர், மகள், மருமகன் மற்றும் 12 வயது பேத்தி உள்ளனர். தாயின் கள்ளக்காதல் விவகாரத்தை அறியாத அந்த பெண்ணின் மகள், தன்னுடைய 12 வயது மகளை தாய் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். அவரும் தனது பேத்தியை பராமரித்து வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் அந்த பெண்ணின் வீட்டிற்கு வசந்த் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது கள்ளக்காதலியின் பேத்தியான 12 வயது சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் வசந்த்தின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இதனால் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பாட்டியிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகவதி விசாரணை நடத்தி சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வசந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தார்.

48 வயதுடைய பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபர், அந்த பெண்ணின் பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal