தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடந்து நிர்வாகிகள் நியமிக்கப்பட்டாலும், இளைஞரணிக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்தும், மாவட்டச் செயலாளர்களுக்கு கூட கொடுக்கப்படவில்லை என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்!

தி.மு.க. இளைஞரணிக்கு அப்படி என்ன முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என அறிவாலயத்துக்கு நெருக்கமான மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்,

‘‘சார், தி.மு.க. மாவட்டச் செயலாளர் நியமனத்தின் போது, இளைஞரணிச் செயலாளரும், சேப்பக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் ஒரு லிஸ்டைக் கொடுத்திருந்தார். அதில் 55 வயதைத் தாண்டியவர்களுக்கு பதிலாக, இளைஞரணியில் துடிப்புடன் செயல்படக்கூடியவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கும்படி ஒரு லிஸ்ட்டை தனது தந்தையும், முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தார்.

தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் சிலர் ஸ்டாலினை நேரடியாக சந்தித்து ‘கண்கலங்க’, ‘மாற்றம் வேண்டாம்’ என்று முடிவெடுத்துவிட்டார். ஆனால், இளைஞரணியில் மாநில துணைச் செயலாளர் பதவி நியமனத்திற்கு மூத்த அமைச்சர்களின் சிபாரிசையே உதயநிதி தட்டிக் கழித்திருக்கிறார். அதாவது, முதல்வர் ஸ்டாலின் தயங்கிய சில விஷயங்களையே தடலடியாக செய்து முடித்திருக்கிறார் உதயநிதி!

அதாவது, கே.என்.நேருவின் மகன் அருண் நேரு, துரைமுருகனின் மகன், பொன்முடியின் மகன் மற்றும் இன்னும் சில மூத்த நிர்வாகிகளின் வாரிசுகள் என இளைஞரணியில் மாநில துணைச் செயலாளர் பதவிக்கு ஒரு பட்டியலே நீண்டிருந்தது. அந்த பட்டியலை புறக்கணித்துவிட்டு, மிகவும் துல்லியமாகவும், இளைஞரணியில் துடிப்புடன் பணியாற்றுபவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்!

அந்த வகையில், மீண்டும் தனது பதவியை தக்க வைத்திருக்கிறார் தூத்துக்குடி எஸ்.ஜோயல்! அதாவது இளைஞரணியில் உதயநிதி ஸ்டாலினுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மாவட்டச் செயலாளர் பதவி, தூத்துக்குடி மேயர் பதவி, எம்.பி. தேர்தலில் சீட் என அனைத்தும் தன்னைவிட்டுச் தள்ளிச் சென்ற நிலையிலும், அவரது அயராத பணியை விட்டுக்கொடுக்காமல் செய்து கொண்டிருந்தார்!

தன்னுடைய தூத்துகுடி தொகுதியைத் தாண்டி, இளைஞரணிச் செயலாளரான உதயநிதியின் தொகுதியில் அவ்வப்போது, விசிட் அடித்து சில நலத்திட்ட உதவிகளை வழங்கியவர்தான் ஜோயல். அதோடு, தூத்துக்குடியிலும், ‘அரசியல் பாலிடிக்ஸ்கு’ மத்தியில் இளைஞரணியை உத்வேகத்துடன் வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் குட்புக்கில் இடம் பிடித்திருக்கும் ஜோயலுக்கு, விரைவில் முக்கியத்தும் கொடுக்கப்படும் என்கிறார்கள்.

அதே போல், அப்துல் மாலிக், பிரகாஷ், சீனிவாசன் உள்பட மற்ற இளைஞரணி துணைச் செயலாளர்களையும் திறம்பட பணியாற்ற உத்தரவிட்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal