2023 சனிப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்களைப் பற்றி பார்ப்போம்!

சனி பகவான் 2023 ஆம் ஆண்டின் ஜனவரி 17 ஆம் தேதி மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். கும்பம் செல்லும் சனி பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், இந்த சனி பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிஷ்டமானதாக இருக்கும். இப்போது கும்ப ராசிக்கு செல்லும் சனியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மிதுனம்

மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்கிறார். இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாடுகளின் வீடாக கருதப்படுகிறது. எனவே இந்த சனி பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். இந்த ஆண்டில் பணத்தை நன்கு சேமிக்க முடியும். குடும்ப விஷயம் மற்றும் வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். இப்பயணத்தால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்பைப் பெறுவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்கிறார். இது திருமண வாழ்க்கை மற்றும் கூட்டாண்மை வீடாக கருதப்படுகிறது. ஆகவே இக்காலத்தில் கூட்டு தொழிலில் நல்ல வெற்றியையும், லாபத்தையும் காண்பீர்கள். இந்த காலகட்டத்தில் நிதி நிலை வலுபெறும். பணியிடத்தில் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையின் உதவியுடன் நல்ல பணத்தைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு இக்காலத்தில் திருமணம் நடைபெறும்.

மீனம்

மீன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்கிறார். இது இழப்பு மற்றும் செலவின் வீடாக கருதப்படுகிறது. எனவே இந்த சனிப் பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்கள் நோயால் செவுகளை செய்ய வேண்டியிருக்கும். ஆயினும் இக்காலத்தில் உங்களால் நன்கு சேமிக்க முடியும். குடும்பத்துடனான உறவுகள் வலுவாக இருக்கும். இக்காலத்தில் அவர்களின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும். மேலும் இக்கால கட்டத்தில் புதிய வாகனம் மற்றும் சொத்துக்கள் வாங்கும் எண்ணம் அதிகரித்து, அதை வாங்க முயற்சித்து வெற்றி பெறுவீர்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal