‘பெண்களின் மானம் உடையில் இல்லை… அவர்கள் வாழும் வாழ்க்கையில் உள்ளது…’ என மனதில் உள்ளதை பட்டென்று உடைத்துப் போட்டிருக்கிறார் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா..!

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அனல் மேலே பனித்துளி. இப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி நவம்பர்18ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்க, கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில், நடிகை ஆண்ட்ரியா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். இதில், ‘‘கதையை கேட்டதும் நான் கதையுடன் அப்படியே ஒன்றிவிட்டேன். நான் ஒரு நடிகையாக இந்த படத்தில் நடிக்காமல் ஒரு பெண்ணாக இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைபட்டேன். நாம் நாட்டில் பல பெண்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் இருக்கிறது ஆது உலகுக்கு தெரியவேண்டும் என்று நினைத்தேன்.

இப்படத்தில் மதி என்கிற கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். பல கனவுடன் சென்னைக்கு வரும் ஒரு பெண்ணின் கதை. பாலியல் வன்முறைக்குள்ளாகும் ஒரு பெண் எப்படி முடங்குகிறாள் என்பது தான் இப்படத்தின் இதன் கரு. இந்த படம் மாதிரி கதைகளை, ஹீரோயின்தான் பண்ண முடியும். ஒரு ஹீரோ பண்ண முடியாது. அதனால, இதுபோன்ற கதைகள் அதிகம் வரவேண்டும்.

மேலும், ஒரு பெண் கற்பழிக்கப் பட்டுவிட்டதால் அந்த பெண் உடை அணியும் விதம் குறித்துத்தான் இந்த சமூதாயம் கேள்வி கேட்கிறது. ஒரு பெண்ணின் மானம் அவள் அணியும் உடையில் இல்லை… வாழும் வாழ்க்கையில் உள்ளது என்று கூறினார். மேலும், திருமணம் குறித்த பேசிய ஆண்டிரியா, எனக்கு 30 வயதில் அய்யயோ கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமே, யாரையும் சந்திக்கவில்லையே என்ற நெருக்கடி எனக்குள் இருந்தது.

ஆனால், நிறைய பேர் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் சந்தோஷம் இல்லை. நிறைய பேர் திருமணம் செய்து கொள்ளாமல் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு எந்த மாதிரியான வாழ்க்கை வரும் என்று எனக்கு தெரியாது. ஆனால் எதுவாக இருந்தாலும் என்னுடைய சந்தோசத்திற்கு நான் தான் பொறுப்பு. அது தான் மிக முக்கியம்’’ என்று ஆண்ட்ரியா கூறினார்.

ஆண்களின் கண்களை உறுத்தும் வகையில் இடை அணிந்தால், தவறுகள் நடக்காதா? என நெட்டிசன் எதிர் விமர்சனங்களையும் வைத்து வருகிறார்கள்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal