ஓட்டலில் விபசார தொழில் நடத்திய புதுவை எம்.எல்.ஏ.வின் தம்பி மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் எம்.எல்.ஏ.வின் தம்பியை போலீசார் தேடி வருகிறார்கள். புதுவையில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து பல இடங்களில் விபசார தொழில் நடந்து வருகிறது.

அழகு நிலையம், ஸ்பா என்ற பெயரில் அழகிகளை வரவழைத்து நடத்தபடும் இந்த விபசார தொழிலில் வசதி படைத்தவர்களை ஆசைகாட்டி பலர் பணத்தை சுரண்டுகின்றனர். ஓட்டல்கள், விடுதிகள் மட்டுமின்றி வீடுகளை வாடகைக்கு எடுத்து ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பெண்களை சப்ளை செய்யும் கும்பலில் பல குடும்ப பெண்களும் சிக்கி கொள்கின்றனர். வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு விபசாரத்தில் ஈடுபடும் குடும்ப பெண்கள் போலீசா ரிடம் சிக்கி கொள்ளும் போது அவர்கள் வெளியே சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொள்கி றார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை நகர பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்திய போது 17 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த சிறுமியை வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா மேற்பார்வையில் பெரியக்கடை மற்றும் ஒதியஞ்சாலை போலீசார் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதி களில் இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய இந்த சோதனை நடந்தது. சோதனையின் போது ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கியிருந்தவர்களின் விவரங்களை சேகரித்தனர்.

மேலும் சட்ட விரோத செயல்கள் நடைபெறுகிறதா? என்று ஒவ்வொரு அறையாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது காமராஜர் சாலையில் சுயேட்சை எம்.எல்.ஏ.வின் சகோதரருக்கு சொந்தமான ஓட்டலில் போலீசார் சோதனை நடத்திய போது அங்கு அழகியை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கடலூரை சேர்ந்த அந்த அழகியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் ஓட்டல் உரிமை யாளரான எம்.எல்.ஏ.வி.ன் தம்பி மகன் ராஜா(வயது28) மற்றும் புரோக்கரான கண்டமங்கலம் அருகே நவமால் மருதூரை சேர்ந்த லெனின்(41) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து ஓட்டலின் மேலாளராக செயல்பட்ட எம்.எல்.ஏ.வின் தம்பியான செழியனை போலீசார் தேடி வருகிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal