சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் இன்று கனமழை பெய்ய வாய்ப்புகள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இன்று காலை 11.45 மணியளவில் சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக சிறப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal