பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வாகனம் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதில் 5க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில் அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் பசும்பொன் சென்று மரியாதை செலுத்துவார்கள் என கூறப்பட்டது. இதனையடுத்து சிவகங்கையில் இருந்து பசும்பொன்னை நோக்கி அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தது. அப்போது மானாமதுரை பகுதியில் நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, கார் ஒன்று எதிர்பாராத விதமாக குறுக்கே கார் ஒன்று வந்துள்ளது.

இதனால் முன்னாள் சென்ற கார் திடீரென பிரேக் பிடித்ததால் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கார்கள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டது.இதில் அதிமுக திருவாரூர் ஒன்றிய செயலாளர் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறத. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், பாஸ்கரன் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர்களோடு காரில் பயணித்த மணிகண்டன், கல்யாணசுந்தரம், ஜோதி, பாபு, தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal