கோவை கார் வெடிப்பு சம்பவம் தமிழகத்தை தாண்டி இந்தியாவையே அதிர வைத்தது. இந்த நிலையில்தான் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தலைமை அறிவுறுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக அக்கட்சித் தலைமை நிர்வாகிகளுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கையில், ‘‘கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, நெல்லை, மதுரை, தூத்துக்குடி உள்பட தமிழகம் முழுவதிலும் உள்ள மாவட்ட நிர்வாகிகள் வெளியில் செல்லும் போது தனியாக செல்லவேண்டும். கூட சில நிர்வாகிகளை அழைத்துச் செல்வது நல்லது.

அதே சமயம், தங்களுடைய வீடு மற்றும் அலுவலகங்களுக்கு அறிமுகமில்லாத நபர்களை அனுமதிக்க வேண்டாம். மேலும் கூரியர் வாயிலாக வரும் பார்சல்களை வாங்கி உடனடியாக பிரிக்கவேண்டாம். அனுப்பியவர்களது முகவரிக்கு தொடர்புகொண்டு, அவர்கள்தான் அனுப்பினார்களா என்பதை ஆராய்ந்து அதன் பின் பிரிக்க வேண்டும். தனியாக நடைபயிற்சி செல்லவேண்டாம். சமூக ஊடகங்களில் கருத்துக்களை மிகவும் கவனத்துடன் பதிவிட வேண்டும்’’ என்று கூறியிருக்கிறது.

கட்சித் தலைமை பா.ஜ.க. நிர்வாகிகளை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal