அதிகாரத்துக்காக அரசியல் கட்சிகள் சாதி, மொழியை வைத்து அரசியல் செய்கின்றனர் என கவர்னர் ஆர்.என் ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து, அவர் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களை உள்ளடக்கியதுதான். தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறி வருகின்றனர்.
அதிகாரத்துக்காக அரசியல் கட்சிகள் சாதி, மொழியை வைத்து அரசியல் செய்கின்றனர். அடிப்படையில் அரசியல் என்பது அதிகாரத்துக்கானது. இது இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும்.
இந்தியா என்ற பெயரே வேறு ஒருவர்கள் வைத்தனர், இந்தியாவை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் பாரத் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பாரத் குறித்து நமக்கு தெரியப்படுத்த வில்லை. இந்தியாவின் வளர்ச்சி என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் இறையாண்மை என்பது தர்மமாக உள்ளது, முந்தைய காலங்களில் அரசர்கள் தர்மத்தின் வழியில் தான் நடந்தனர். இது தவறும் பட்சத்தில் யாரும் தூக்கி எறிய படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.