எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் செங்கலை காட்டியவர் எங்கே இருக்கிறார்… செங்கோலை வென்றவர் எங்கே இருக்கிறார்… என ஆர்.பி. உதயகுமார் சரமாரிமாரியான கேள்வி எழுப்பியிருக்கிறார்!
எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று தமிழக அரசியல் வரலாற்றில் அம்மாவும், எடப்பாடியாரும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தினார்கள். அதனை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு பாரத பிரதமர் மூலம் எடப்பாடியார் அடிக்கல் நாட்டை வைத்தார். தமிழகத்தில் 37 அரசு மருத்துவ கல்லூரி இருந்தாலும், எய்ம்ஸ் மருத்துவமனை என்பது தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.
இன்றைக்கு கட்டுமான பணி என்றைக்கு தொடங்கும் என்று தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள், பல்வேறு விவாதம் நடைபெற்று வருகிறது, இதற்கு தேவையான நிலம் வருவாய் துறை சார்பில் எடப்பாடியார் வழிகாட்டுதலோடு 222 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, சுற்றுச்சுவர், பதியசாலை போன்ற பணிகள் நடைபெற்று தயார் நிலையில் உள்ளது.
இப்போது என்ன கேள்வி எழுகிறது என்றால், நிலம் இங்கே செங்கலைக் காட்டியவர் எங்கே என்று தென் மாவட்ட மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். செங்கலை காட்டிய விளம்பரம் தேடியவர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆவார். இந்த ஒன்னரை ஆண்டு காலம் செங்கலை காட்டியவரும், மக்களிடம் இருந்து செங்கோலை பெற்றவரும் அந்த செங்கலை பற்றி பேச வாய் திறக்க மறுப்பது ஏன்?
இன்று தென் மாவட்ட மக்கள் கேள்வி கேட்கிறார்கள். அவர் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறாரா அல்லது அவர் சார்ந்த கலை துறையில் கவனம் செலுத்துகிறாரா? ரெட் ஜெயன்ட் மூவிசை உலக அளவில் எடுத்துச் சென்ற பாடுபடுகிறாரா இல்லை, எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர கவனம் செலுத்துகிறார என்று பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைக்கு ஒரு முறை கூட செங்கலை காட்டியவரும் வரும் வரவில்லை, செங்கோலை பிடித்தவரும் (ஸ்டாலின்)ஒருமுறை ஆய்வு செய்ய வரவில்லை என்று தென் மாவட்ட மக்கள் ஏங்கி கொண்டுள்ளார்கள்.
மத்திய அரசுக்கு நீங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் இன்றைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஜைக்கா நிறுவனம் 1,500 கோடியை ஒதுக்கி, 26.3.2021யில் கையெழுத்து இட்டுள்ளது. மொத்த மதிப்பீடு 1,977 கோடியில் ஜைக்கா நிறுவனம் 1,500 கோடி நிதி ஒதுக்கி உள்ளது, மீதியை வரும் அக்டோபர் 26 ஆம் தேதிக்குள் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது, இதில் ஜைக்கா 82% மத்திய அரசும் 12% தர முடிவுக்கு வந்துள்ளது. நிதி பிரச்சனையில் ஓரளவில் நல்ல செய்தி நமக்கு கிடைத்திருக்கிறது.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது, சாலை கொடுக்கப்பட்டுள்ளது, சுவர் எழுப்பப்பட்டுள்ளது, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது, ஜைக்கா நிறுவனம் 1500 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது நல்ல செய்தி வந்தாலும் கூட, கட்டிட பணி எப்போது தொடங்கும் என்ற நல்ல செய்தி எப்போது தென் மாவட்ட மக்கள் கோரிக்கையாக உள்ளது. ஆகவே செங்கலை காட்டிய உதயநிதி கட்டிடம் கட்ட செங்கலை எப்போது எடுத்து வைப்பார் என்று மக்கள் கேள்வி எழுப்புள்ளனர்.
ஒன்னரை ஆண்டுகளில் நீங்கள் எத்தனை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வாங்கினீர்கள். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த ஒன்றரை ஆண்டுகளில் கட்டிடம் கட்ட ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை என்று அதிருப்தி மக்களிடத்தில் எழும்பியுள்ளது, எப்போது எய்ம்ஸ் வரும் என்று காத்திருக்கும் மக்களை ஏமாற்றாமல் திமுக அரசு நடவடிக்கை தொடர வேண்டும்,இதுவும் நீட் கதை போல் சென்று விடக்கூடாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வீட்டிற்கு முதல் கையெழுத்து நீட்க்கு என்று சொன்னீர்களே? சொன்னது என்ன ஆச்சு காற்றிலே பறந்து போனது, இதற்கு பதில் சொல்வதை விட செயல் வடிவத்தில் நீங்கள் செய்ய மக்கள் காத்துள்ளார்கள்’’ என ஆர்பி உதயகுமார் கூறியிருக்கிறார்.