துத்துக்குடி தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.
கடந்த 2002-2006ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தியது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது.
இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உச்சநீதிமன்றதில் வழக்கு தொடர்ந்திருந்தார். அனிதா கிருஷ்ணனின் சொத்துக் குவிப்பு வழக்கில் தடைகோரிய மனு மீதான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடக்க இருக்கிறது. இந்த உச்சநீதிமன்ற நீதியரசர் அஜய் ரஷ்தோகி பென்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது.
சொத்துக் குவிப்புக்கு தடையோரிய வழக்கு விசாரணை அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக வந்தால், அவரது அமைச்சர் மற்றும் மா.செ. பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்!