அதிமுகவின் அமைப்புச் செயலாளராக உள்ள பண்ருட்டி ராமச்சந்திரனை அரசியல் ஆலோசகராக நியமிப்பதாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
அதிமுக பொது குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஓபிஎஸ்-, இபிஎஸ் என அதிமுக பிளவுப்பட்டுள்ளதால் அடிமட்ட தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு எதிராக போட்டி அதிமுகவாக இயங்கி வரும் ஓபிஎஸ், தான் தான் உண்மையான அதிமுக என கூறி வருகிறார். மேலும் ஒன்றரை கோடி தொண்டர்கள் தங்கள் பக்கள் இருப்பதாவும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தனது அணிக்கு வலு சேர்க்கும் வகையில் பல்வேறு நிர்வாகிகளையும் அவ்வப்போது ஓபிஎஸ் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதனையடுத்து ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித் நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நீக்கி வருகிறார். இதற்க்கு போட்டியாக ஓபிஎஸ்ம் புதிய மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என புதிய நிர்வாகிகள் தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் அதிமுகவின் மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ‘‘எடப்பாடி பழனிச்சாமி தலைமையை மக்கள் விரும்பவில்லை என்றும் இதன் காரணமாகவே அவர் தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்வியை தழுவியுள்ளனர்’’ என்றார்.
மேலும் பேசிய அவர், ‘‘ அதிமுகவில் இதே தலைமை நீடித்தால் நீதி கட்சி எப்படி அழிந்தது அதேபோல் அதிமுகவும் அழிய நேரிடும்’’ என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவை பற்றி கருத்து கூற பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு எந்த தகுதியும் இல்லை என்று தெரிவித்தார். ஒரு கிளைக் கழக செயலாளர் இருக்கும் தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை என்றும் தெரிவித்தவர். பண்ருட்டி ராமச்சந்திரன் சென்ற கட்சிகள் எல்லாம் படுத்தே விட்டதாக தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி இந்த பேச்சுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர் இந்நிலையில், ஓ .பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், அதிமுகவின் அமைப்புச் செயலாளராக உள்ள பண்ருட்டி ராமச்சந்திரனை அரசியல் ஆலோசகராக நியமிப்பதாக தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அமைச்சரவையில் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு ஓபிஎஸ் அணியில் புதிய பொறுப்பு வழங்கியது இபிஎஸ் அணியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.