தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவதில் சட்ட சிக்கல் இருப்பதாக கவர்னர் ரவி கூறினார்.

இது, குறித்து அவர் கூறியிருப்பதாவது: பல்கலைக்கழகங்களில் தரமான கல்வியை வழங்குவதில் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தமிழகம் கடந்த காலங்களில் சிறப்பான முறையில் இருந்துள்ளது. ஆனால் சமீப காலமாக தமிழகத்தில் பட்டியலின வகுப்பினர் மீதும் பெண்கள் மீதும் குற்றங்கள் அதிகரித்துள்ளது.

கல்வி பொது பட்டியலில் உள்ளதால், அரசியல் சாசன ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. பல்கலைக்கழக மானிய குழு, சட்டப்படி துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவதில் சிக்கல் இருக்கிறது. மாநில அரசுடன் நான் நல்ல நட்புறவுடன் இருக்கிறேன். முதல்வர் சிறப்பான முறையில் செயல்படுகிறார்.இவ்வாறு அவர் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal