நாட்டில் நாளுக்கு நாள் போதைக் கலாச்சாரம் தலைதூக்கி வருவதுதான் வேதனை அளிக்கிறது.
பள்ளி மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கஞ்சா, சரக்கு அடிக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த நிலையில்தான், பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள மக் பூல்புரா பகுதியில், நேற்று முன்தினம் ஒரு இளம்பெண் சாலையில் தள்ளாடியபடி நடந்துள்ளார். இந்த ‘வீடியோ’ வேகமாக பரவியதையடுத்து, போலீசார், அப்பெண்ணை தேடும் நடவடிக்கையில் இறங்கினர். அப்போது, 3 பேரை பிடித்த போலீசார், அவர்களிடமிருந்து போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ”ஏராளமான போதைப் பொருள்கள் குஜராத் துறைமுகம் வழியாக கொண்டு வரப்பட்டு, பஞ்சாப் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்தப்படுகின்றன. இதில், மேலிடத்திற்கு தொடர்பிருப்பது தெரிகிறது,” என குற்றம் சாட்டி யுள்ளார்.