தமிழகத்தில் புதிதாக உயர்த்தப்பட்ட மின்கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நிதிச்சுமையை ஏற்பட்டுள்ளதால் வருவாயை ஈட்ட மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. இது மக்களை பாதிக்கும் என எதிர்கட்சியினர் குரல் கொடுத்தாலும் ஏனைய மாநிலங்களை விட தமிழக மின் கட்டணம் குறைவு தான், மேலும் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல இருந்ததையும் அரசு மக்களுக்கு கூறியது.
இந்நிலையில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதே நேரத்தில் 100 யூனிட் வரை இலவசம் என்பது தொடரும். 2027 வரை இந்த கட்டண உயர்வு அமலில் இருக்கும். குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டுதலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
புதிய மின்கட்டண உயர்வு குறித்த விவரம் வருமாறு:
இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 இலட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.27.50 உயர்த்தப்படும்.
இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 36.25 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 உயர்த்தப்படும்.
இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்தப்படும்.
இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.56 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 உயர்த்தப்படும்.
இரு மாதங்களுக்கு மொத்தம் 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (1.32 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.155 உயர்த்தப்படும்.
இரு மாதங்களுக்கு மொத்தம் 700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.96 இலட்சம் வீட்டுமின் நுகர்வோர்களுக்கு (0.83 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.275 உயர்த்தப்படும்.
800 யூனிட் வரை பயன்படுத்துவோர் மாதம் ஒன்றிற்கு 395 வீதம் 2 மாதங்களுக்கு ரூ. 790 செலுத்த வேண்டும்.
900 யூனிட் வரை மாதம் ஒன்றுக்கு ரூ. 565. செலுத்த வேண்டும் இரண்டு மாதம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.