அண்மைக்காலத்தில் தமிழகத்தின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்த்த நிகழ்ச்சிகளில் முதன்மையானது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியாகும். இந்த நிகழ்வின் மூலம் தமிழகத்தின் பெருமையையும் இங்கு உலகத்தில் இருந்தெல்லாம் வந்திருந்த விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த அவர்களது தேவைகள்ஐஐ வீரர்கள் நடத்தப் பட்ட விதம்ஐஐ அவர்களுக்கு விருந்து வைத்து உபசரித்தது உள்ளிட்ட அனைத்தும் அந்தந்த நாட்டு வீரர்களால் அந்தந்த நாடுகளில் போய்ப் பேசப்பட்டு அந்தந்த நாட்டு அச்சு ஊடகங்கள் காட்சி ஊடகங்கள் எல்லாம் தமிழகத்தின் பெருமையை பிரதிபலித்தன.
அத்துடன் தமிழக முதல்வருக்கும் அந்தப் பெருமைகள் என்றாலும் அதற்காக அவருக்கு உறுதுணையாகவும் பெரும் பணியை ஏற்றுக் கொண்டு முதல்வரின் எண்ணத்தை செயல் படுத்திக் காட்டியமைக்காகவும் அவரது உள்ளத்திலும் உலக மக்களின் நினைவுகளிலும் நீங்கா இடம் பெற்றவர் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.
அவர் விளையாட்டுத்துறைகளின் அமைச்சர் மட்டுமல்லாது அவரிடம் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் ஆகிய துறைகளையும் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. இவர் சென்னையில் எப்படியிருக்கிறார் என்பது ஒரு புறமிருக்க சொந்த ஊருக்கு வரும்போது காலை ஆறுமணிக்கெல்லாம் தயாராகி விடுகிறார்.
அவர் அப்படித் தயாராக இருப்பதற்கு அவரது உடற்பயிற்சியும் சுறுசுறுப்பும் காரணம் என்றாலும் அவரைத் தேடி நாள்தோறும் கட்சியின் முக்கியப் பிரமுகர்களும் தொண்டர்களும் நண்பர்களும் பொது மக்களும் உதவி தேடி வருபவர்களும் என அதிகாலையிலேயே வந்து விடுவதால் அவரது வீட்டைச் சுற்றிலும் இருக்கும் பகுதியே களைகட்டி விடுகிறது.
அதேபோல் அவரைத் தேடி வருபவர்களுக்கு அவர்களின் தேவையறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து விடுவதாலும் அவரை நாடி வருகிறார்கள். மேலும் அவர் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்குச் சென்று விடுவார் என்பதால் மற்றவர்களைவிட தான் முந்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக நம்பிக்கையோடு வருகிறார்கள். அதே போல் யார் எந்த மனுவைக் கொண்டு வந்தாலும் அதைச் சரியாகச் செய்ய வேண்டிய அதிகாரி யார் என்று அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முடித்துக் கொடுப்பதிலும் அவருக்கு நிகர் அவர்தான். அதே போல் செய்ய முடியாத வேலையைக் கொண்டு வந்தால் அதைச் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிடுவதோடு மாற்று ஏற்பாடாக எதைச் செய்ய முடியுமோ அதையும் செய்து கொடுத்து விடுகிறார். பல பணிகளுக்காக அவரை வாழ்த்த வருபவர்கள் ஒருபுறம் என்றால் பிறந்த நாள், பணி கிடைத்தமை, கல்வியில் இடம் கிடைத்தமை, மருத்துவ வசதி கிடைத்தமை உள்ளிட்ட பல உதவிகள் கிடைத்த பிறகும் அவரிடம் வாழ்த்துப் பெறுவதற்காக வருபவர்களும் நாள்தோறும் வந்து அமைச்சரிடம் வாழ்த்துப் பெறுகிறார்கள்.
அவரது வீட்டுக்கு வருபவர்கள் வெறும் கட்சிக்காரர்களும் தொண்டர்களும் மட்டுமல்லஐஐ ஆன்மீக அன்பர்களும் கும்பாபிசேகம் நடத்துவதற்கு நிதி வாங்க வருபவர்களும் பூமிபூஜை போட வேண்டியும் அதனை நடத்தித்தர வேண்டுகோள் விடுத்து வருபவர்களும் அதிகம். அதே நேரத்தில் யார் மனதும் புண்படக்கூடாது என்பதிலும் தந்தை பெரியார் கொள்கையைப் பின்பற்றி வருபவர் என்பது பலபேருக்குத் தெரியாத சங்கதி. அவரது அலுவலகத்திலும் வீட்டிலும் அவரைச் சந்திக்க வருபவர்கள் முதலில் தந்தை பெரியார் உருவச்சிலைஐஐ பேரறிஞர் அண்ணாஐஐ முத்தமிழறிஞர் கலைஞர்ஐஐ ஆகியோரது சிலைகளையும் மு.க.ஸ்டாலின் அவரது புகைப்படத்தையும் பார்த்து விட்டுத்தான் அமைச்சரையே பார்க்க இயலும். ஏன் என்றால் அத்தனையையும் தனது மேசையில் வைத்திருக்கிறார். தற்போது அந்த வரிசையில் முதலிடத்தைப் பிடித்திருப்பது சதுரங்கச் சிலையாகும்.
முத்தமிழ் வித்தகர் கலைஞர் கருணாநிதியைத் தொடர்ந்துஐஐ மு.க.ஸ்டாலின் வரிசையில் முதலில் படிக்கும் பத்திரிகை முரசொலியும் தந்தை பெரியாரின் கொள்கைகளைத் தாங்கி வரும் விடுதலை நாளேடும் ஆகும். அந்தப் பத்திரிகைகளும் அவரது மேசையில் இருக்கும். தந்தை பெரியார் அவர்கள் தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடம் எப்படி நடந்து கொண்டு நட்பு பாராட்டினாரோ அதேபோல்தான் தன்னைத்தேடி வரும் ஆன்மீகப் பெருமக்களிடமும் அன்பு பாராட்டி வருகிறார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.
உலக சதுரங்கப் போட்டி குறித்து அவரிடம் கேட்டபோது இதை உலகளவில் கொண்டு போய்ச் சேர்த்தது அந்தந்த நாட்டு வீரர்களும் ஊடகங்களும் என்றாலும் அனைத்துக்கும் காரணம் தமிழக முதல்வர் தளபதிதான். அவர் சொன்ன பணிகளை நான் மேற்கொண்டேன் என்பதுதான் என் பங்கு. அவரது எண்ணங்களைச் செயலாக்க முடிந்திருக்கிறது என்பதிலும் அதைச் சிறப்பாகச் செய்து முடிக்கக் கிடைத்த வாய்ப்பாக இதைக் கருதுகிறேன் என்றார் தன்னடக்கத்தோடு.
பகுத்தறிவுவாதிய
£க இருக்கும் தாங்கள் தொகுதிக்குள் இருக்கும் கோயில்களுக்கெல்லாம் சென்று வருகிறீர்கள்ஐஐ குடழுக்கு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறீர்களே என்ற கேள்விக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் மூடநம்பிக்கை என்பதும் பகுத்தறிவு என்பதும் அவரவர் எடுத்துக் கொள்வதாகும். தொகுதி மக்கள் என்னிடம் என்ன எதிர் பார்க்கிறார்களோ அதைச் செய்து கொடுக்க வேண்டியது எனது கடமை. பக்தர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு இருக்கும் தேவையைச் செய்து கொடுக்க வேண்டியதும் அரசின் கடமை என்பதை உணர்ந்துதான் பக்தர்களின் தேவையை ஆன்மீக நண்பர்களின் தேவையைச் செய்து கொடுக்கிறேன்.
தொகுதி மக்களின் நலனே அவர்களது நம்பிக்கையைப் பெற்ற எனது நலனும். இதே தொகுதியில் கடந்த முறை சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டும் எதிரக் கட்சி வரிசையில் அமர வேண்டிய நிலையில் இருந்தது. அப்போது தொகுதி மக்களுக்கு நிறையச் செய்ய முடியவில்லை. இருந்தாலும் மறுபடியும் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு இப்போது செய்ய முடிகிறது என்றார்.