அ.தி.மு.க.வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற நிலையில், ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து செயல்படுவதாக அறிவித்திருக்கிறார்.

எடப்பாடி தரப்பினர் நடத்திய பொதுக்குழுவுக்கு போட்டியாக, ஓ.பன்னீர் தரப்பு போட்டி பொதுக்குழுவை நடத்த தயாராகி வருகிறது. இந்த நிலையில்தான், அ.தி.மு.க.வில் ஓரங்கட்டப்பட்டிருக்கும் நிர்வாகிகளுக்கு ஓ.பி.எஸ். தரப்பில் பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஓ.பி.எஸ். அணியில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் இணைந்து வருகின்றனர். திருச்சி மண்டல அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் ஓ.பி.எஸ். அணியில் இணைந்தனர். இதே போல், இன்னும் அரசு போக்குவரத்து கிளை பணிமனையில் பணிபுரியும் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஓ.பி.எஸ். அணியில் இணையை பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal