போதையும்… காமமும் தலைக்கேறினால் தறிகெட்டு நடப்பார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. அப்படி ஒரு அசிங்கமான சம்பம்தான் ஆந்திராவில் அரங்கேறியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவருக்கு கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாததால் அங்குள்ள குடிசை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்த 3 வாலிபர்கள் மூதாட்டி வீட்டிற்கு சென்று கதவை தட்டினார். தூக்கத்தில் இருந்த மூதாட்டி எழுந்து வந்து கதவை திறந்தார்.

அப்போது மூதாட்டியை வீட்டிற்குள் தூக்கிச் சென்றவர்கள் கத்தி கூச்சலிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடினர். காலையில் நீண்ட நேரமாகியும் மூதாட்டி வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

மூதாட்டி மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து கடப்பா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal