அ.தி.மு.க.,வின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், வைத்திலிங்கம் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் திமுக அரசுடன் நட்பு பாராட்டுவது, திமுக அரசின் செயல்பாடகளை பாராட்டி பேசுவதும், தலைவர்களுடன் நட்பு வைத்து கொண்டு கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் செயல்படுகிறார். தான் கையெழுத்து போட்டு கொடுத்த பொதுக்குழுவுக்கு எதிராக புகார் அளித்தது , நிர்வாகிகள் எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு தொடர்ந்தது சிறிது அக்கறை இல்லாமல் செயல்பட்டது, அமைச்சரவை கூட்டு பொறுப்பு என்பது தெரிந்தும், அதிமுக அரசின் செயல்களை விமர்சித்து பேசியும், விளம்பரம் கொடுத்ததும் கட்சிக்கு எதிரானது. கட்சியின் நன்மை கருதி சட்ட விதி 35ன் படி பன்னீர்செல்வம், பொருளாளர் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
அதேபோல், கட்சியின் நலனுக்கும், விதிகளுக்கு எதிராகவும் , பலவீனப்படுத்தும் வகையில் செயல்படும் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், பி.எச்.பாண்டியன் ஆகியோரும் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். பன்னீர்செல்வத்துடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. என்றார். இதனை தொடர்ந்து, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், ‘‘நான் கழக சட்டப்படி கோடிக்கணக்கான தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். எடப்பாடி பழனிசாமிக்கோ, முனுசாமிக்கோ யாருக்கும் உரிமை இல்லை. இவர்களுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் என்னை கட்சியில் இருந்து நீக்குவதாக தன்னிச்சையாக அறிவித்ததை அடுத்து இவர்கள் இருவரையும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நான் நீக்குகிறேன். மேலும் சட்டரீதியில் நான் போராடி வெற்றி பெறுவேன்’’ இவ்வாறு அவர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி முறைப்படி பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டி ஓ.பி.எஸ்.ஸை நீக்கியிருக்கிறார். ஆனால், ஓ.பி.எஸ். ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் கலவரத்தை ஏற்படுத்தி எடப்பாடியை நீக்கியிருப்பது ‘காமெடி’யாக இருக்கிறது என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்!