சினிமாவில் மவுசு குறைந்த பிறகு நடிகைகள் அரசியலுக்கு வருவது சகஜமாகிவிட்டது. அரசியலுக்கு வந்தபிறகும், அங்கு பதவிகள் கிடைக்கவில்லை என்றால் மாற்றுக்கட்சிக்கு தாவிவிடுகிறார்கள்.

தமிழகத்தில் பிரபல முன்னணி நடிகையாக வலம்வந்த திரிஷா அரசியில் இறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன! 2000 த்தின் தொடக்கத்திலிருந்தே தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளாக விளங்கி வருபவர்கள் நயன்தாராவும் திரிஷாவும். 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கோலோச்சி வரும் இருவரும் தற்போது நாயகிகளை மையமாக கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.

இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் வெளியானதை தொடர்ந்து தான் காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனை அண்மையில் திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடிக்கவும் உள்ளார்.

அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் திரிஷா நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பொன்னியின் செல்வம் 2 ஆம் பாகத்திலும் அவர் நடித்து முடித்திருக்கிறார். சதுரங்க வேட்டை 2, ராம் உள்ளிட்ட படங்களை அவர் தன்வசம் வைத்திருக்கிறார். மேலும் பிருந்தா என்ற இணைய தொடரிலும் திரிஷா நடித்து வருகிறார்.

இந்த நிலையில்தான் கோலிவுட் வட்டாரத்தில் நடிகை த்ரிஷா அரசியலுக்கு போகப் போவதாக சொல்கிறார்கள். அதாவது, ‘காங்கிரஸ் தரப்பில் ஒரு முக்கியத் தலைவர் த்ரிஷாவிடம் பேசியிருப்பதாக சொல்கிறார்கள். விரைவில் காங்கிஸ் கட்சியில் த்ரிஷா இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள். ஏற்கனவே, காங்கிரஸில் இருக்கும் நக்மாவிற்கு ‘ராஜ்யசபா எம்.பி.’ பதவி கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸில் நடிகை த்ரிஷா இணைந்தால், குஷ்புவின் இடத்தை நிரப்புவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal