சாதி ரீதியாக சர்ச்சையான கருத்துக்களை பகிர்ந்துகொண்ட இரு ஆசிரியர்கள் மீது பள்ளிக் கல்வித்துறை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சாட்டையை சுழற்றியிருப்பதை வி.சி.க. வரவேற்றிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது… இந்த பள்ளியில் பெற்றோர் – ஆசிரியர் சங்க தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த சமயத்தில், அரசு பொதுத்தேர்வு ஆரம்பமாகும் என்பதால், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 7-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு, மறுபடியும் அந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்த பெற்றோர் ஆசிரியர் சங்க தேர்தலில், மீனா என்ற ஆசிரியை போட்டியிடுகிறார். இவர் அந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனைடயே, தன்னுடைய மாணவர் ஒருவருக்கு கலைச்செல்வி என்ற இன்னொரு டீச்சர் போனை போட்டு பேசியதும், அது தொடர்பான ஆடியோவும் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

பெற்றோர் ஆசிரியர் கழக தேர்தலில் மாணவரின் ஊரைச் சேர்ந்தவர்கள் போட்டியிட வேண்டும் என்றும், சில ஆசிரியர்கள் சரியாக இருப்பதில்லை என்றும் மாணவனிடம் சொல்கிறார். சமத்துவம் போதிக்க வேண்டிய ஆசிரியயே, மாணவரிடம் சாதி ரீதியாக பேசியது பெரும் கொந்தளிப்பையும், எரிச்சலையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

கலைச்செல்வியின் இந்த சாதி ரீதியான பேச்சுக்கு மீனா டீச்சரும் உடந்தையாக இருந்துள்ளதும் தெரியவந்தது. இந்த வீடியோ வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே, மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவின்பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி விசாரணையை துவங்கினார். தொடர்ந்து உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, கணினி ஆசிரியை மீனா ஆகிய 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை விசிக வரவேற்றுள்ளது.

டீச்சர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷூக்கு நன்றியையும் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு பதிவிட்டுள்ள ட்வீட்டில், ‘‘உடனடி நடவடிக்கை எடுத்த மாண்புமிகு அன்பில்மகேஷ் அவர்களுக்கு நன்றி. அதே நேரத்தில்,தென்மாவட்ட பள்ளிகளில் வெளிப்படையாக இம்மாதிரியான சாதிய உரையாடல்களை ஆசிரியர்களே ஊக்கப்படுத்தி வருகிறார்கள். இதை தடுக்க எல்லா மாவட்டத்திலும் ஊடகவியலாளர்கள் அடங்கிய கண்காணிப்புக்குழு ஒன்றை அமைக்கவேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளிக்கூடம் படிக்கும் மாணவர்களிடையே வேறுபாடு தெரியக்கூடாது என்பதற்காகத்தான் ஒரே மாதிரியான சீறுடை அணிந்து வருகிறார்கள் என்பதுகூடவா ஆசிரியிர்களுக்குத் தெரியாது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal