அதிமுகவில் ஒற்றை தலைமை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் கொண்டு வந்தால் அது செல்லாது என்றும் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் தற்போது உள்ள நிலை குறித்து விவரித்தார். விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஓபிஎஸ் எப்போதும் போல் அமைதியாக சென்று விடுவார் அவருக்கு அவைத்தலைவர் பதவி கொடுத்து ஓரங்கட்டப்படலாம் என நினைத்த இபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இதனையடுத்து அதிமுக மூத்த நிர்வாகிகள் இரண்டு தரப்பிலும் ஆலோசனை நடத்தினர். நான்காவது நாளாக இன்றும் ஆலோசனை மேற்கொண்டார் ஓ.பன்னீர் செல்வம். சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்தம்பி துரை, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைத்திலிங்கம், ‘ஒற்றை தலைமை பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காண ஓ பன்னீர் செல்வத்துடன் தம்பிதுரை விவாதித்தார். பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் கொண்டு வந்தால் அது செல்லாது என்று கூறினார். அதிமுகவில் ஒற்றை தலைமை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் என்றும் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal