‘ஒற்றைத் தலைமை’ விவகாரம் தொடர்பாக அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஓற்றை லைமை குறித்து முடிவு எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே கருத்து மோதல் வலுத்துள்ள நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர்

அதிமுக செயற்குழு விரைவில் கூடவுள்ள நிலையில் நாள்தோறும் அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இன்று காலையில் கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஆர்.பி. உதயக்குமார், செம்மலை, கட்சியின் முன்னாள் அவைத்தலைவர் பொன்னையன், வைகை செல்வன் ஆகியோர் கூடி ஆலோசத்தினர். இந்த கூட்டத்தில் நடக்கவுள்ள செயற்குழு கூட்டத்தில் என்ன நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

இதற்கிடையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இணை ஒருங்கிணப்பாளர் பழனிசாமி சேலத்தில் அவரது ஆதரவாளர்கள் வீட்டில் முக்கிய ஆலோனையில் ஈடுபட்டுள்ளார். இவரது இல்லம் முன்பு தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதுபோல் சசிகலா அவரது வீட்டில் ஆலோசித்து வருகிறாராம். ‘ஓ.பி.எஸ். கார் கண்டிப்பாக ஹபிபுல்லா ரோட்டிற்கு வரும்’ என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாராம் சசிகலா!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal