இந்துக்களின் புனித நதியாக கருதப்படும் கங்கை நதியில் அயல்நாட்டினர் அரை நிர்வாணமாக குளிப்பதுதான் நெட்டிசன்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது.

உத்தராகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில் அருகில் உள்ளது ரிஷிகேஸ். இந்துக்களின் புனித நகரமாக கருதப்படும் இங்கு ஓடும் கங்கை ஆற்றின் கரையில் ஏராளமான கோயில்களும், ஆசிரமங்களும் உள்ளன.

பண்டைய காலத்தில் முனிவர்களும், ரிஷிகளும் வாழ்ந்த இடமாக ரிஷிகேஷ் கருதப்படுகிறது. இதன் காரணமாக ரிஷிகேஷில் உள்ள கங்கை நதியில் நீராட இந்தியா முழுவதும் இருந்து சாதுக்கள், முனிவர்கள், பக்தர்கள் பலர் வருகின்றனர்.

இந்த நிலையில், ரிஷிகேஷில் உள்ள கங்கை நதியில் பிகினி உடையில் வெளிநாட்டினர் நீராடுவது போன்ற வீடியே இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹிமாலயன் இந்து என்பவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, தற்போது பெரும் பேசுபொருளமாக மாறியுள்ளது.கடந்த 24-ம் தேதி அவர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ரிஷிகேஷில் பிரபலமடைந்து வரும் மேற்கத்திய சுற்றுலா கலாச்சாரம் புனிதமான இந்த இடத்தை மினி பங்காங் ஆக மாற்றி விடும் என்றும் அவர் அந்த பதிவிற்கு தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோவில், உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் கருத்துக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே ஏப்ரல் 24-ம் தேதியில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ரிஷிகேஷில் ரேவ் பார்டிகள் மற்றும் ஜாம்பி கலாச்சாரம் ஊக்குவிக்கப்படுவதாகவும், முதல்வர் ஏதாவது செய்ய வேண்டும் என்றும் அந்த வீடியோவில் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், “ரிஷிகேஷ் இப்போது மதம், ஆன்மிகம் மற்றும் யோகாவின் நகரமாக இல்லை. அது கோவாவாக மாறிவிட்டது. ஏன் ரிஷிகேஷில் இதுபோன்ற ரேவ் பார்ட்டிகள்., ஜாம்பி கலாச்சாரம் ஊக்குவிக்கப்படுகிறது,” என்று கவலையுடன் பதிவிட்டிருந்தார். இந்த புனித நகரத்தை அவர்கள் அழிக்கும் முன் ஏதாவது செய்ய வேண்டும்,” என்றும் வலியுறுத்தியுள்ளார். குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டு வீடியோ பதிவுகளும் நெட்டிசன்களிடமிருந்து பரவலான விமர்சனங்களைப் பெற்று வருவதுடன் வைரலாக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal