ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று (ஜூன் 9) மாலை 3 மணிக்கு தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் வெளியிடுகிறார்.

நாட்டின் 14வது ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம், ஜூலை மாதத்துடன் முடிகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார், தேர்தல் கமிஷனர் அனூப் சந்திர பாண்டே ஆகியோர், மத்திய உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சகங்களுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில், இன்று (ஜூன் 9) பிற்பகல் 3 மணிக்கு தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளார். அதில், ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 18ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal