தமிழகத்தில் இனி சனிக்கிழமையும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட அறிவிப்புகள்,

*சென்னை மற்றும் மதுரையில் இரண்டு பதிவு மண்டலங்கள் உருவாக்கப்படும்.
*சென்னை மண்டலத்தில் தாம்பரத்தை மையமாக வைத்து கூடுதலாக ஒரு புதிய மண்டலம் அமைக்கப்படும்.

  • பொது மக்கள் பத்திரப்பதிவு செய்ய ஏதுவாக தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்கள் இனி சனிக்கிழமையும் செயல்படும்.
    *சனிக்கிழமை மட்டும் ரூ.1,000 கட்டணமாக வசூலிக்கப்படும்.
    *பதிவு செய்த திருமண சான்றுகளை இணையம் வழியாக விண்ணப்பித்து திருத்தம் செய்யும் வசதி ரூ.50 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

*அவசர ஆவண பதிவிற்காக, பதிவுத்துறையில் தட்கல் முறை அறிமுகம் செய்யப்படுகிறது.
*தட்கல் முறையில் ரூ.5 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

  • முதல் கட்டமாக 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal