‘தமிழக கவர்னருக்கு முறையான, முழுமையான பாதுகாப்பு வழங்கப்படாததற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்’ என்று தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘‘தமிழக ஆளுநர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மயிலாடுதுறைக்கு சென்ற போது கருப்புக் கொடி காட்டியதை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக ஆளுநர் செல்லும் வழியில் ஒரு கூட்டம் கருப்புக்கொடி காட்ட இருப்பது தெரிந்தும், தமிழக அரசு ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பில் பொறுப்புடன் செயல்பட வில்லை.

மேலும் ஆளுநர் செல்லும் போது, கருப்புக் கொடி காட்டியவர்கள் மீதும், ஆளுநர் செல்லும் வாகனங்கள் மீது தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீதும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இந்த சம்பவத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பு. இனியும் இதுபோன்று ஒரு அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக்கொள்வது தமிழக அரசின் கடமை’’ என்று அதில் கூறியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal