‘சினிமாவையும், திமுகவையும் பிரிக்க முடியாது’ என சென்னையில் நடந்த ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் குறிப்பிட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டில் மேலும் பேசும்போது,

‘‘நானும் சினிமா துறையை சேர்ந்தவன் நான், நாடக மேடையிலும் நடித்தவன். இந்த மாநாட்டில் நான் மிக ஆர்வமாக பங்கேற்றுள்ளேன். முதல்வராக என்னை பார்க்க வேண்டாம். உங்களில் ஒருவனாக பாருங்கள். அப்பா முதல் எனது மகன் வரை சினிமா துறையில் தொடர்பு உண்டு. சினிமாவையும், திமுகவையும் பிரிக்க முடியாது போல் என்னையும், என் குடும்பத்தையும் சினிமாவில் இருந்து பிரிக்க முடியாது.திரைத்துறை வளர்ச்சி, சிந்தனை தூண்டுவதாக உள்ளது. குட்கா மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு திரைப்படத்தில் வாசகம் ஏற்படுத்த வேண்டும். முற்போக்கு சம்பந்தமான திரைப்படங்கள் எடுக்க வேண்டும்.

திரைத்துறையில் முத்திரை பதித்தது தமிழ்நாடு. எனவே இந்த மாநிலத்தில் இந்த மாநாடு நடத்துவது மிக உகந்தததாக உள்ளது. கோவிட்டால் திரைப்பட துறை பாதிக்கப்பட்டுள்ளது.திரைத்துறை மேம்பட அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்’’இவ்வாறு அவர் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal