சமீபத்தில்தான் டெல்லியில் தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த திறப்பு விழாவில் ஏராளமான சொதப்பல்கள் நடந்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்த வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில்தான் டெல்லியில் கட்டப்பட்டுள்ள தி.மு.க. அலுவலகம் தொடர்பாக, முன்னாள் எம்.பி.யும், தற்போது பி.ஜே.பி.யில் மாநில துணைத்தலைவராக இருக்கும் கே.பி.ராமலிங்கம் வலைதளங்களில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

அந்த பதிவில், ‘‘ அண்ணன் டி.ஆர்பாலு அவர்களுக்கு வணக்கம். டெல்லியில் தி.மு.க. அலுவலகம் கட்டுவதற்கு எனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கியுள்ளேன். ஆகவே, அந்த கட்டிடத்தின் பங்குதாரர் என்ற முறையில், ‘இந்த அலுவலகம் கட்ட மு.க.ஸ்டாலின் தனது சொந்த வருமாணத்தில் இருந்து எவ்வளவு கொடுத்தார் என்பதை தெரியப்படுத்த வேண்டும். நான் பங்குதாரர் என்ற அடிப்படையில் கடமைப்பட்டுள்ளீர்கள்’ என்பதை உணர்ந்து செயல்பட கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

டெல்லியில் தி.மு.க. அலுவலகம் கட்டுவதற்கு பத்து வருடங்களுக்கு முன்பாக மறைந்த கலைஞர் உத்தரவின் பேரில் மு.க.அழகிரி, செல்வகணபதி உள்பட அப்போதிருந்த அனைத்து எம்.பி.க்களும் நிதியுதவி வழங்கினார்கள். ஆனால், அவர்கள் யாருக்கும் அலுவலகம் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal