பெங்​களூரு​வைச் சேர்ந்த முன்​னணி தகவல் தொழில்​நுட்ப (ஐடி) நிறுவன பெண் மேலா​ளர் ஒரு​வர், தற்​போது ஆட்டோ ஓட்​டுந​ராக பணி​யாற்றி வரு​கிறார்.

கேரளாவை பூர்வி​க​மாகக் கொண்ட பெண் தொழில​திபர் நெஸ்​ரின் மித்​லாஜ். ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாயை மைய​மாகக் கொண்டு அவர் பல்​வேறு நிறு​வனங்​களை நடத்தி வரு​கிறார். அண்​மை​யில் கர்​நாடக தலைநகர் பெங்​களூரு​வுக்கு சென்ற அவர் ஒரு ஆட்​டோ​வில் பயணம் செய்​தார். ஆட்​டோவை ஓட்​டிய இளம்​பெண்​ணின் நடை, உடை பாவனை, தெளி​வான ஆங்​கில உச்​சரிப்பை பார்த்து வியந்த தொழில​திபர் மித்​லாஜ், அந்த பெண்ணை குறித்து விசா​ரித்​தார்.

அப்​போது பெங்​களூரு​வின் முன்​னணி தகவல் தொழில்​நுட்ப நிறு​வனத்​தில் சுமார் 9 ஆண்​டு​கள் அந்த பெண் மேலா​ள​ராகப் பணி​யாற்றி இருப்​பதை அறிந்து ஆச்​சரி​யத்​தில் உறைந்​தார். ஐடி துறை​யின் பணிச்​சுமை, மனஅழுத்​தம் காரண​மாக மேலா​ளர் பதவியை ராஜி​னாமா செய்த அந்த பெண், தற்​போது சொந்​த​மாக ஆட்டோ ஓட்டி வரு​கிறார்.

இதுகுறித்து தொழில​திபர் நெஸ்​ரின் மித்​லாஜ் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

‘‘ஒரு பெண் ஆட்டோ ஓட்​டுநரை சந்​தித்​தேன். அழகான சீருடை​யில் இருந்த அவர் தன்​னம்​பிக்​கை, மனநிறைவோடு வாழ்​கிறார். பொது​வாக ஆண்​களே ஆட்டோ ஓட்​டுநர்​களாக பணி​யாற்​று​வார்​கள். இந்த துறை​யில் நீங்​கள் நுழைந்​தது ஏன் என்று கேள்வி எழுப்​பினேன்​.அதற்கு அந்த பெண் அளித்த பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்​தி​யது’’ என்றார்.

“9 ஆண்​டு​கள் ஐடி நிறு​வனத்​தில் மேலா​ள​ராகப் பணி​யாற்​றினேன். அழுத்​தம், மனஉளைச்​சல், பதற்​ற​மான மனநிலை காரண​மாக அந்​தப் பணியை துறந்​து​விட்​டேன்‘‘ என்று பெண் ஆட்டோ ஓட்​டுநர் கூறி​னார்.

தற்​போது அவர் சொந்​த​மாக ஆட்டோ வாங்கி ஓட்​டு​கிறார். மாதம் சுமார் ரூ.60,000 ஊதி​யம் ஈட்​டு​கிறார். இந்த பணி​யில் அவர் மகிழ்ச்​சி​யாக வாழ்​கிறார். ‘‘கவுர​வத்​தை​விட மன அமை​தியே முக்​கி​யம்’’ இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal