அ.தி.மு.க.விடம் இருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அதனால் எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை என சசிகலா பகீரங்கமாக பேசியிருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணைக்காக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த இரண்டு நாட்களாக ஆஜரானார். இரு நாட்களிலும் சுமார் 9 மணி நேரம் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் பரபரப்பான பல்வேறு வாக்குமூலங்களை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு உண்மையான பதிலை அளித்துள்ளதாகவும், செயலலிதா மரணத்தில் சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை’’ என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த சசிகலா, ‘‘எது உண்மையோ அதை மாற்றவோ, திரையிட்டு மறைக்கவோ முடியாது. மக்களுக்கு உண்மை தெரியவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டபோது நானும் வரவேற்றேன். விசாரணை ஆணையம் மூலமே உண்மை பொதுமக்களுக்கு தெரியவரும்.

ஜெயலலிதா மரணத்தில் கடவுளுக்கு தெரிந்த உண்மை ஓபிஎஸ் மூலம் மக்களுக்கு தெரியவந்துள்ளது. என் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை இருப்பதாக உண்மையைதான் ஓபிஎஸ் கூறியுள்ளார்.அதிமுக தரப்பிடமிருந்து இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. அழைப்பு வராதது குறித்து எந்த வருத்தமும் இல்லை’’ என்று கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal