துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (மார்ச் 24) மாலை துபாய் செல்ல உள்ளார்.

துபாயில் கடந்த சில மாதங்களாக சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகள் பங்கேற்கும் இந்த கண்காட்சியில் ஒவ்வொரு நாட்டு பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியா சார்பில் அமைக்கப்பட்ட அரங்கை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திறந்து வைத்திருந்தார். அதில் தமிழகத்திற்கான இடத்தில் தமிழகத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தொழில் கண்காட்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை மாலை துபாய் செல்ல உள்ளார். இதற்காக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளல் பங்கேற்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். அங்கு வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்தை நோக்கி ஈர்க்கும் பணிகளும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினுடன் உதயநிதி உள்ளிட்டோரும் பயணம் மேற்கொள்கின்றனர். முதல்வரான பின்னர் ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal