இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினசரி 5 சதவீதமாக குறைந்து வருகிறது என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,597 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

இது கடந்த 34 நாட்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் குறைவு ஆகும். நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 39 ஆயிரத்து 611 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 22,524 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

மகாராஷ்டிராவில் 6,436, கர்நாடகாவில் 6,151, தமிழ்நாட்டில் 5,104, மத்திய பிரதேசத்தில் 3,945, குஜராத்தில் 2,909, உத்தரபிரதேசத்தில் 2,403, ராஜஸ்தானில் 2,298, மிசோரத்தில் 2,224 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 7.25 சதவீதத்தில் இருந்து 5.02 ஆகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 9.18 சதவீதத்தில் இருந்து 8.30 ஆகவும் குறைந் துள்ளது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 860 பேர் இறந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 24, கர்நாடகாவில் 49, மேற்கு வங்கத்தில் 29, ஒடிசாவில் 20, குஜராத்தில் 21 அரியானாவில் 21 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 1,188 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,04,062 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,80,456 பேர் நேற்று முழுமையாக நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 8 லட்சத்து 40 ஆயிரத்து 658 ஆக உயர்ந்தது. தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 9,94,891 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 1,14,047 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் மக்களுக்கு இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 170 கோடியே 21 லட்சத்தை கடந்துள்ளது. இதில் நேற்று மட்டும் 55,78,297 டோஸ்கள் அடங்கும். இதற்கிடையே நேற்று 13,46,534 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 74.29 கோடியாக உயர்ந்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராயச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal