செங்கல்பட்டில் தனியார் பள்ளி வகுப்பறையில் கொத்தானார் ஒருவரை சித்தாளுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார். மறுநாள் சித்தாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்த சம்பவம்தான் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்த மலர் (45) என்ற பெண் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு கடந்த செவ்வாய் கிழமை கட்டிட வேலை செய்ய வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று பணி முடிந்து, பள்ளி வகுப்பு அறைக்கு கொத்தனார் கரிகாலனுடன் (வயது 46) தனியாக சென்றுள்ளனர். அங்கு இரவில் உல்லாசமாக இருந்துவிட்டு, காலை பத்து மணி வரை அறை விட்டு வெளி வராததால், மற்ற பணியாற்றிவர்கள் மலரை தங்கியிருந்த அறையில் பார்த்துள்ளார். அங்கு மலர் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடந்து காவல்துறையினர் கட்டடத்தில் பணியாற்றியவர்களிடம் விசாரனை மேற்கொண்டதில் பல திடுக் தகவல்கள் வெளியானது. மலருக்கும், மாம்பழப்பட்டு பகுதியை சேர்ந்த கரிகாலனுக்கும் 10 வருடமாகவே தகாத உறவு இருந்துள்ளதாம்.ஆனால், மலருக்கு வேறு ஒருவருடன் தகாத உறவு இருப்பதாகவும், அதனால் ஏற்பட்ட பிரச்சினையால் மலரை கரிகாலன் கொன்றுவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடந்து காவல்துறையினர் கட்டடத்தில் பணியாற்றியவர்களிடம் விசாரனை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இறந்த போன மலருக்கும், அவருடன் பணியாற்றிய மாம்பழப்பட்டு பகுதியை சேர்ந்த கரிகாலன் ஆகிய இருவருக்கும் கடந்த பத்தாண்டு காலமாக தகாத உறவு இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தகாத உறவில் ஏற்பட்ட பிரச்சினையால் மலரை கொலை செய்துவிட்டு கரிகாலன் தலைமறைவாகியிருக்கலாம் என்ற கோணத்தில் கரிகாலனை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த ஜோடிக்குள் கள்ளக்காதல் தகராறா? அல்லது கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா என்று உறுதியாக தெரியவில்லை. அவர் கைது செய்யபட்ட பிறகுதான் கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்று தெரிய வரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal