எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாயையொட்டி நாளை (நவம்பர் 26ம் தேதி) தி.மு.க. இளைஞரணி மாநில துணைச் செயலாளர் எஸ்.ஜேயல் கை வண்ணத்தல் எழுதப்பட்ட ‘எழுச்சிப் பாடல்’ வெளியிட்டு விழா அறிவாலயத்தில் நடக்க இருக்கிறது.

இசையமைப்பாளர் பி.மாரிசக்தி இசையில், ‘உதயா அண்ணன் வராரு’ என்கிற பாடல் வெளியீட்டு விழாவும், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நாளை காலை 9 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற இருக்கிறது. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பாடலை வெளியிட, அன்பகம் செந்தில் குமார் மற்றும் இளைஞரணி துணைச் செயலாளர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.

தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் பாடல் வரிகளில் நடக்கும் வெளியீட்டு நிகழ்ச்சி குறித்து இளைஞரணி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், தொடர்ச்சியாக கடந்த நான்கு வருடங்களாக உதயநிதி அவர்களின் பிறந்தநாளையொட்டி ‘எழுச்சி பாடல்’ வெளியீட்டு விழா நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார் எஸ்.ஜோயல்!

தி.மு.க.வைப் பொறுத்தளவில் கலைஞருக்கு எப்படி எழுச்சிப் பாடல்கள் உணர்ச்சிப் பொங்க, உடன்பிறப்புக்களை தட்டி எழுப்பும் பாடல்களாக இருந்ததோ? அதே போல் இளைஞரணியின் எழுச்சி நாயகன், திராவிட இயக்கத்தின் எங்கள் எதிர்காலமான உதயநிதிக்கும் எழுச்சிப் பாடல்கள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.

தி.மு.க.வின் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் உதயநிதிக்காக பாடப்படும் எழுச்சிப் பாடல்கள் உடன்பிறப்புக்களை வெகுவாக கவர்ந்திருப்பதோடு, பொதுமக்களையும் சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த அத்தனைப் பெருமைகளும் அண்ணன் எஸ்.ஜோயலையே சேரும்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal