‘‘தமிழக பாஜகவில் தலைவர் மாற்றமும் தேவையில்லை. தலைகீழ் மாற்றமும் தேவையில்லை. தமிழக பாஜகவில் தலைவர் மாற்றத்தை விட, யார் தலைவராக வரவேண்டும் என்பதை விட, தமிழக பாஜக தலைவரின் மனமாற்றமே வெற்றிக்கு முக்கியம். தமிழக மக்கள் மனதை புரிந்து கொண்டு, தொண்டர்களின் எண்ணங்களை அறிந்து கொண்டு, கள அரசியலை கண்ணும் கருத்துமாக கவனித்து தமிழ், தமிழர், தமிழகத்தின் உரிமைக்கு, மகிழ்ச்சிக்கு வளர்ச்சிக்கு உணர்வுடன் போராடினால் மட்டுமே தமிழக அரசியலில் பாஜகவிற்கு வெற்றி நிச்சயம் சாத்தியமாகும்’’ என முன்னாள் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக முன்னாள் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பாஜகவிற்கு இரு கண்களாக இன்று பாரதத் திரு நாட்டின் காவல் தெய்வங்களாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் மத்திய உள்துறை அமைச்சர் அவர்களும் துணை இருக்கும் பொழுது நாம் ஒழுங்காக, ஒழுக்கமாக தொண்டர்களை மதித்து சிறப்பாக செயல்பட்டால் வருகின்ற 2029 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியே மகத்தான வெற்றி பெறும்.
அதற்கு குறைந்தபட்சம் பாஜக மாநில தலைவர் கீழ்க்கண்ட ஒரு சிறு நல்ல விஷயங்களை உயர்ந்த நல்லெண்ணத்துடன், அக்கறையான உணர்வுடன் துணிந்து, நேர்மையுடன் செயல்படுத்த வேண்டும். தமிழக பாஜகவிற்கு மீண்டும் மீண்டும் பயிற்சி வகுப்புகள் நடத்துவதிலும், பூத் கமிட்டி அமைப்பதிலும், அரங்கு கூட்டங்களை அலங்காரப்படுத்தி பத்திரிகைகளிலும் முகநூல்களிலும் படத்தைப் போட்டுக் கொண்டு பெருமை பேசுவதிலும் வளர்ச்சி வராது.
மண்டல் தலைவர் மற்றும் மண்டல் நிர்வாகிகளை மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் விதத்தில் கட்சி நிகழ்ச்சிகளை, மக்கள் நல நிகழ்ச்சிகளாக பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பாக நடத்துவதற்கு மாநில தலைமை உரிய முறையில் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை, வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து உற்சாகப்படுத்தும் வகையில் செயல்பட்டால் மட்டுமே பாஜக மக்கள் களத்தில் மீண்டும் ஒரு எழுச்சியோடு பயணிக்க கூடிய வகையில் செயல்பட முடியும்.
மாநில அணி, பிரிவுகளில் நியமிக்கப்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட அணி பிரிவுகளில் நியமிக்கப்பட்ட மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள் முதலில் தங்களுடைய மண்டல் தலைவர்கள் தங்களுடைய பூத் தலைவர்கள் யார் என்று அறிந்து கொண்டு அவர்களை சந்தித்து, மிக முக்கியமாக தங்கள் மண்டல் தலைவர்கள் சந்தித்து மண்டல் தலைவர்களோடு இணைந்து பணி செய்யும் போது மட்டும் தான் மாற்றம் ஏற்பட முடியும். மாவட்டத் தலைவர்களை விட மண்டல் தலைவர்களே முதன்மையானவர்கள் என்ற முடிவை தமிழக பாஜக தலைமை தற்போது எடுத்தால் மட்டுமே மண்டல் தலைவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவித்தால் மட்டுமே பாஜக முழுமையாக வலிமை பெறும்.
மாவட்ட தலைவருக்கு இருக்கும் மரியாதை மாவட்ட நிர்வாகிகளுக்கும் மாநில தலைமை அளிக்க வேண்டும். மாவட்ட தலைவர்கள் மையக் குழுவின் முடிவின்படி செயல்பட்டால் மட்டுமே தற்போது நல்ல மாற்றம் ஏற்பட முடியும். அமைப்பு ரீதியாக அமைதியாக, பயணித்தால் நிச்சயம் பாராளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
குறிப்பாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் என அனைவரையும் அன்புடன் தமிழக பாஜகவில் இணைக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தோடு, உண்மையாக உணர்வுபூர்வமாக பாசத்தோடு, இல் இருந்து பிரிந்து சென்றவர்கள், நீக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மாநிலத் தலைவர் மீண்டும் பாஜகவிற்கு வர வேண்டும் என்று ஒரு கடிதத்தை ஒவ்வொரு ஒரு முகவரிக்கும் சென்று சேரும் வகையில் மாநில முழுக்க அனைவரின் வீட்டுக்கும் பேரன்போடு அழைப்பு அனுப்பினால் மிகப்பெரிய மாற்றம் தமிழக பாஜகவிற்கு ஏற்படும்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வருகை, மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களின் வருகையின் போது புதிது புதிதாக உறுப்பினர் என்ற பேர்வையில் செல்வந்தர்கள், பல லட்சங்களை வழங்கி பிரதமர் மோடியை சந்திக்கும் மோசமான வழக்கத்திற்கு இனி முற்றிலும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட சில மாநில நிர்வாகிகள் மட்டும் பிரதமரையும் , உள்துறை அமைச்சரையும் சந்திப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாநில மூத்த தலைவர்கள், மையக்குழு உறுப்பினர்கள் மட்டும் சந்திப்பது வழக்கமான மரபு.மட்டுமல்ல மாநில நிர்வாகிகள் மற்றும் ஏற்கனவே சந்தித்தவர்கள் அவர்கள் அனைவருமே பெருந்தன்மையுடன் இனி பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அவர்களை மீண்டும் மீண்டும் சந்திப்பதை தவிர்க்க வேண்டும்.
அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிப்பதை விட தகுதி வாய்ந்த சந்திக்காதவர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொழுது அனைவருமே சந்திக்கக்கூடிய வாய்ப்பு கட்சியில் ஏற்படும் கட்சி ஒரு உற்சாகம் பெறும். இது போன்ற நான் சொன்ன சிறு சிறு விஷயங்களில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தினாலே பாஜகவின் வெற்றி நம் கண் எதிரே தெரியும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
