சென்னையில் காவல்துறையினரை மிரட்டியதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
ரூ. 100 கோடி மோசடி செய்ததாக திமுக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அன்பில் மகேஸ் கைது நடவடிக்கையின்போது காவல்துறைக்கும் திமுக முன்னாள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், வாக்குவாதத்தில் காவல்துறையினரை மிரட்டும் வகையில் சேகர்பாபு பேசியதாக அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், விசாரணைக்கு ஆஜராகுமாறு சேகர்பாபுவுக்கு சென்னை வேப்பேரி காவல்துறையினர் அழைப்பாணை விடுத்தனர். அழைப்பாணை விடுக்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இன்று (அக்டோபர் 30) நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
