மத்திய இணை அமைச்சர் பதவியையும் மாநிலங்களவை எம்.பி. பதவியையும் எல்.முருகன் ராஜினாமா செய்த நிலையில், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள அந்த மாநிலங்களவை இடத்துக்கு நவம்பர் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக்டோபர் 22-ந் தேதி) அறிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட எல்.முருகனின் பதவிக்காலம் 2030-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி வரை இருந்தது.

ஆனால் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் கட்சிப் பணிகளில் முழுநேரமாக ஈடுபடப் போவதாகக் கூறி, அக்டோபர் 13-ந் தேதி பிரதமர் மோடிக்கு 5 பக்க ராஜினாமா கடிதத்தை எல்.முருகன் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal