தி.மு.க. மீது கடும் விமர்சனத்தை வைத்த வைகோவுக்கு தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் நெத்தியடியுடன் கூடிய சாட்டையடி பதில் கொடுத்திருக்கிறார்.

மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில் ‘‘பாத்திரப்பிழை’’ எனும் தலைப்பில்,
‘‘கலைஞர் இறக்கும் போது அவரை தூக்கிச் செல்வதற்கு நான்கு திமுக தொண்டன் கிடைக்காத நிலையை உருவாக்குவேன்’’என்றவரை…
அன்று அம்மா
பொடறியில் அடித்து
பொடாவில் பிடித்து உள்ளே
அடைத்த போது…
வேலூர் சிறைக்கே சென்று தைரியம் கொடுத்து தட்டிக் கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்றால்…
மூடுவிழா நடத்திவிட்ட கட்சிக்கு ‘‘அப்பனுக்கு ராஜ்யசபா மகனுக்கு லோக்சபா’’ என கொட்டிக் கொடுத்து எள்ளும் தண்ணீரும் இறைத்தது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…
ஆனால் நன்றி உணர்ச்சி என்பது எங்கள் ஜீன்லலேயே இல்லை என்பதை தந்தையும் மகனும் தங்கள் வாய்ச்சான்றிதழால் நீரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாத்திரம் அறியாது இட்ட பிச்சைக்கு
பலன் இப்படித்தானோ..?
என்னநாஞ் #சொல்றது’’ என பதிவிட்டிருக்கிறார்.
உண்மைதானே… தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கடந்த ஆட்சியில் எப்படியெல்லாம் வைகோ புகழ்ந்து பேசினார் என்பதை மக்கள் அதற்குள் மறந்துவிட்டார்களா என்ன?
