த.வெ.க. அரசின் தகிடுத்தத்தங்களை ‘‘#விழிப்பாய்..!’’ எனும் தலைப்பில் தி.மு.க. கொள்கை பரப்புத்துறைத் தலைவர் மருது அழகுராஜ் தனது அடுக்கு மொழி தமிழில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில்,
‘‘எதிர்க் கட்சியாக
திமுக இருக்கட்டும்”
என்பதில் இருந்த
மக்களின்
தெளிவு
‘‘ஆளுங்கட்சியாக
அவர்கள் தான்
வரவேண்டும்”
என்பதில்
இல்லை…
ஆம்…
கோட்டு மாடல்
சர்க்கார்
அது எல்லை
தொடாத
குறைப்
பிரசவம்
குழப்பத்தில்
பிறந்த
குழந்தை
மயக்கத்தில்
விளைந்த
மழலை…
தன் வீட்டு
இட்லிக்கு
மாவு போதவில்லை என்று
எதிர் வீட்டு
இடியாப்ப மாவை திருடி
புதுவகையாய்
செய்த
‘‘இட்லியாப்பம்”..
யதார்த்தத்துக்கு
மாறான
பதார்த்தம்…
அது
அபாயம்
என்பதை
காலம்
நூதனமாய்
உணர்த்திய
நூத்தியெட்டு
தங்களால்
முடியாது
என்பதால்
எந்திர தந்திரத்தால்
SIR
மந்திரவாதிகள்
ஏவிய ஏலியன்ஸ்
கூட்டம்
ஏவல்
ஆட்டம்…
களிமண்ணை
பொம்மை
ஆக்கலாம்
உண்மை ஆக்க
முடியாது என்பதை
அது
கண்முன்
காட்டிக் கொண்டிருக்கும்
காமெடியாக்கும்…
ஆம்…
வாழத் தெரியாத
மக்கள்
வடிவமைத்த
ஆளத்தெரியாத
மக்குகளின்
கோமாளிக்
கூடாரம்…
அது
கோட்டுக்கு
மாறியது போல
கோட்டையை
மாற்றப்
பார்க்கிறது
அலை கொண்ட
கடலில்
வலை கொண்டு
வாழும்
மக்களை
அகதிகளாக்கத்
துடிக்கிறது…
கருப்பு பொட்டு
கம்பெனி
பொற்கால
தமிழகத்தை
கற்காலம்
நோக்கி கடத்த
கார்ப்பரேட்
ஆட்களோடு
கணக்குப்
போட்டு
அலைகிறது
பட்டினப்
பாக்கத்தை
பார்க்கிங்
கட்டணப்
பிரவேசமாக்க
கனத்த
திட்டத்தோடு
கடற்கரை
பக்கம்
திரிகிறது..
வளையாச்
செங்கோலை
அழிரப்பராக்கி
வளர்தமிழ்
பூமியின்
பூகோளப்
பெருமைக்கு
‘‘போகி” நடத்தத்
துடிக்கிறது..
விழிப்பாய்
தமிழாய்
நெருப்பாய்..!
