கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்று தருவதாக 100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மறுத்துவிட்டது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற விவகாரத்தில், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ், அவரது உறவினர், உதவியாளர்கள் ஆகியோர், அமலாக்கத் துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணை தலைவர் அரசகுமார், 58, மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர், தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற விவகாரத்தில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த லஞ்ச விவகாரத்தில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ், அவரது உறவினர் வாலாடி கார்த்திக், உதவியாளர்கள் அருண் பிரகாஷ் மற்றும் பிரகாஷ், முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமார் மற்றும் அவரது உதவியாளர்கள் சரவணன், ரமேஷ் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அரசகுமார், முத்துகுமார், மகேஷ் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் சோதனை நடத்தி, குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட, 44 ஆவணங்களை, போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

இந்நிலையில், அரசகுமார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், முத்துகுமார் உள்ளிட்டோர், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்க துவங்கி உள்ளனர். பணமோசடி தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து வழக்கு ஆவணங்களை பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில், முன்னாள் அமைச்ச்ர மகேஷ், அவரது உறவினர், உதவியாளர்கள் உள்ளிட்டோர், அமலாக்கத் துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal